நடிகர் விஜய்க்கு இன்று 37வது பிறந்த நாள். ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஏழை மக்களுக்கு உதவிகள், மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு, பாடப்புத்தகங்கள் என வழங்கி தனது வருமானத்தில் சிறு பகுதியை சமூக சேவைக்காக பயன்படுத்தி வரும் விஜய், இன்று தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார். முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் விஜய். இந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை ரத்த தானம், கண் தானம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கிறார் விஜய். இந்த மருத்துவமனையில்தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் மொத்தம் 500 குழந்தைகளுக்கு அவர் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்படுவதாக அவரது பிஆர்ஓ செல்வக்குமார் தெரிவித்துள்ளார். இது தவிர, சாலி கிராமத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதனை விஜய் தொடங்கி வைத்தார். ஷோபா திருமண மண்டபத்தில் ஏழைகளுக்கு இலவச புடவை, வேட்டிகளையும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் விஜய் வழங்கினார் விஜய். சின்மயா நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று மதிய உணவாக பிரியாணி வழங்குகிறார்.
அதுமட்டுமல்ல.. அவரது சந்தோஷத்துக்கு மற்றொரு காரணமும் கூட உண்டு. இதுவரை எந்த வெளிநாட்டு விழாக்களுக்கு செல்லாத விஜய் படங்கள், முதன்முதலாக சீன விழாவில் அடியெடுத்து வைத்தது 'காவலன்'. எந்த ஒரு படத்துக்கும் படாத பாடு இந்தப் படத்தை வெளி கொண்டுவர பட்டுவிட்டார் விஜய். ஆகையால், பட்ட பாடுகள் எல்லாம் பறந்து போனது. சீனாவில் கிடைத்த அங்கீகாரம் ஜப்பானில் ரஜினிக்கு கிடைத்தது போன்றதாகும். அதனால் தன்னுடைய எல்லா படங்களையும் சீனாவில் வெளியிட திட்டமிட்டுள்ளார். அப்போ டபுள் சந்தோஷந்தானே! வாழ்த்துகள் விஜய்!