
இளைய தளபதி விஜய் தற்போது 'வேலாயுதம்', 'நண்பன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விஜய் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு 'யோஹன்-அத்தியாயம் ஒன்று' என்று பெயரிடப்பட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பு நிறுவனமான போட்டான் கேதோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இயக்கமும் தயாரிப்பாளரான கௌதம் மேனன்தான். இப்படத்தின் விளம்பரத்தினை பார்த்தால் இது தொடர்வரிசை படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதில் 'ஒன்றாம் குறிக்கோள் - நியூயார்க்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து இரண்டாம் குறிக்கோள், மூன்றாம் குறிக்கோளை வைத்து படவரிசை வரலாம் எனத் தெரிகிறது. 2012-ல் அதிரடி ஆரம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு இனிமேல்தான் நடைபெற இருக்கிறதாம்.
No comments:
Post a Comment