Diwali relies For Kavalan..... songs relies in navambor முதலில் காவல்காரன் என்றார்கள், பிறகு காவல் காதல் என்றார்கள். இப்போது காவலன் என உறுதிபடுத்தியிருக்கிறார்கள். விஜய், அசின் நடிப்பில் சித்திக் இயக்கும் படத்தைப் பற்றிதான் சொல்கிறோம்.மலையாளத்தில் பாடிகாட் என்ற பெயரில் சித்திக் எடுத்த படமே தமிழில் காவலனாகியிருக்கிறது. சமீபத்தில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அசின் இதில் கலந்து கொண்டார்.
விஜய்யின் தொடர் தோல்விகளுக்கு இப்படம் முற்றிப்புள்ளி வைக்கும் என விஜய் தரப்பு நம்புகிறது. படத்தை ஷக்தி சிதம்பரம் வாங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விநியோகஸ்தர்களும், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் காவலன் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதையடுத்து ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வேலாயுதத்தை பொங்கலுக்கு கொண்டு வர தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார்.
No comments:
Post a Comment