ரசிகர்களாகப் பார்த்து தளபதியாக புரமோட் பண்ணுவார்கள் என்று எதிர்ப்பார்த்த விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்ச, கடைசியில் அவரே அந்தப் பட்டத்தைச் சூட்டிக் கொண்டுள்ளார்!.
பட்டத்தை மட்டுமல்ல… தனது அடுத்த படத்துக்கும், ரஜினியின் மிகப் பிரபலமான இந்த படத் தலைப்பைத்தான் பயன்படுத்தப் போகிறாராம் (ரஜினி ரசிகர்கள் பல்லை நறநறப்பது தெரிகிறது… இருந்தாலும் உண்மை இதுதானுங்கோ!).
ஜெயம் ராஜா இயக்கத்தில், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படம் விஜய்க்கு 51 வது படம்.
படத்தின் தலைப்பு: தளபதி. இசை யுவன் ஷங்கர் ராஜா. நாயகி அசின் என்பது மட்டும்தான் இப்போதைக்கு உறுதியான செய்தி.
மற்றவை தெரிய வரும்போது சுடச் சுட தருவோம்!
No comments:
Post a Comment