விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிக்கும் “வேலாயுதம்” படப்பிடிப்பு பொள்ளாச்சியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நடந்து வருகிறது. அங்குள்ள வல்லகுண்டாபுரத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. கதைக்கு பொருத்தமாக இருந்ததால் அவ்வூரை தேர்வு செய்தனர்.
விஜய்யின் தங்கையாக நடிக்கும் சரண்யா மோகனின் திருமண காட்சியை அங்கு எடுத்தனர். அப்போது ஊரே தங்கள் வீட்டு திருமணம் போல பாவித்து வீட்டுக்கு வீடு அலங்காரம் செய்து கோலம் போட்டு தோரணம் தொங்க விட்டு இருந்தனர். சீரியல் லைட்டுகளும் போட்டு இருந்தார்கள்.
கிராமத்தினர் அளித்த ஒத்துழைப்பால் படக்குழுவினர் நெகிழ்ச்சியானார்கள். படப்பிடிப்பின்போது அந்த கிராமத்தில்தான் காமெடி நடிகர் கவுண்டமணியின் வீடு உள்ளது என்று விஜய்யிடம் தெரிவித்தனர். உடனடியாக விஜய்யும் படத்தின் இயக்குனர் ராஜாவும் அவ்வீட்டுக்கு சென்றனர்.
கவுண்டமணி தாயார் வீட்டில் இருந்தார். அவரிடம் விஜய் உடல்நலம் விசாரித்து வாழ்த்து பெற்றார். சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் கவுண்டமணி வீட்டிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
வல்லாகுண்டாபுரத்தில் ஒரு கிணறு வெட்டி சில காட்சிகளை எடுத்தனர். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கிணற்றை அந்த கிராமத்துக்கே தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அன்பளிப்பாக கொடுத்து விட்டார். அந்த ஊரில் உள்ள மாசானி அம்மன் கோவிலுக்கு ஊர் மக்கள் விஜய்யை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டினார்கள்.
No comments:
Post a Comment