கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் 'யோஹன் - அத்தியாயம் ஒன்று'. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2012- முதல் நடைபெற இருக்கிறது என்பது எல்லாம் பழைய விஷயம். தற்போது இப்படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் கிடைத்திருக்கிறது. இப்படம் மிகப்பெரிய வங்கி கொள்ளை பற்றி நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கிறதாம். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு, 'மதராசபட்டினம்' படத்தில் நடித்த எமி ஜாக்சனை நடிக்க வைக்க இயக்குநர் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம். எமி ஜாக்சன் தற்போது 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் விஜய்யின் நடிப்பில் மட்டுமின்றி, திரையுலக வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என விஜய் தரப்பு நம்பி வருகிறதாம்.
No comments:
Post a Comment