மார்க்கெட்டில் திடீர் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது தெய்வ திருமகள் இயக்குனர் விஜய்க்கு. ’சுட்டுக்’ கொடுப்பதில் மட்டுமல்ல, அதையே சூடாக கொடுப்பதிலும் வல்லவர் என்று நினைத்திருக்கலாம். இந்த டிமாண்ட் நடிகர் விஜய் வரைக்கும் தொற்றியிருப்பதுதான் ஆச்சர்யம்.
தெய்வ திருமகள் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின் போதே அடிக்கடி அஜீத்தை சந்தித்து கதை பேசி வந்தார் விஜய். எனவே அஜீத்தின் பில்லா-2 வுக்கு பிறகு விஜய்க்குதான் அஜீத்தின் கால்ஷீட் என்று பரவலாக பேசி வந்தார்கள். இல்லையில்லை, யூடிவி தயாரிக்க, மீணடும் விக்ரமும் விஜய்யும் இணைகிறார்கள் என்ற பேச்சும் பரவியது. ஆனால் இவ்விரு தகவல்களையும் வெளுத்துப் போக வைத்திருக்கிறது புது தகவல் ஒன்று.
நடிகர் விஜய்யிடம் ஒரு கதை சொன்னாராம் டைரக்டர் விஜய். அது பிடித்துப் போனதால் நண்பன் முடிந்த கையோடு இதில் நடிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறாராம் விஜய். கவுதம் மேனன் படத்தை சற்றே ஒத்தி வைத்துவிட்டு விஜய்யை உள்ளே நுழைத்திருப்பதாகவும் பேச்சிருக்கிறது.
திடீர் திடீரென்று ஏற்படும் திருப்பங்களில் சிக்கி நசுங்கிப் போய் கிடப்பதென்னவோ, செந்தமிழன் சீமான் இயக்குவதாக சொல்லப்பட்ட படம்தான்!

No comments:
Post a Comment