குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியாக மாறியவர் ஷாலினி. 'அமர்க்களம்' படத்தில் அஜித்துடன் நடித்த போது, அவர்களுக்குள் காதல் மலரவே, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அனோஷ்கா என்ற அழகான மகளை பெற்றெடுத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட ஷாலினி குடும்பத்தலைவியாகவும், இறகுப்பந்து வீராங்கனையாகவும திகழ்கிறார். சிலதினங்களுக்கு முன்பு, தேனியில் மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஷாலினி ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அஜித்-விஜய் போட்டி பற்றி குறிப்பிட்டிருந்தார். அதை அப்படியே உங்களிடம்... "சினிமாவில் அஜித்துக்கும் விஜயக்கும் போட்டிதான். அது ஆரோக்கியமான போட்டி. ஆரோக்கியமான போட்டி நல்லதுதான். எதிலும் போட்டி இருக்கணும். ஆனா அவங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நானும் விஜய்யின் மனைவியும் நல்ல தோழிகள். எங்க ரெண்டு பேரோட குழந்தைகளும் அப்படித்தான்." என்றார். அதுசரி... ஊருக்கே தெரிஞ்ச விஷயத்த பறந்து பறந்து சொல்லுதுப்பா இந்த சிட்டுக்குருவி.....
No comments:
Post a Comment