வேலாயுதம் படத்துக்கு இசையமைப்பாளர் விஜயஆண்டனியை முடிவு செய்துள்ளார்கள்.வேலாயுதம் படத்துக்கு அடுத்து பன்ன போறப் படம் 3இடியட்ஸ் ரீமேக்கில் நடிக்க விஜய் முன் வந்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. இந்தப் படத்துக்காக மென் தாடி வைக்கவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.3 இடியட்ஸின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் வாங்கியுள்ளது. ஷங்கர், ஜெமினி லேப்புக்கு படம் செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாகத் தகவல். ' 3 இடியட்ஸ் ' இந்தி படத்தின் உரிமையை வாங்கி வைத்திருக்கும் ஜெமினி லேப் ஷங்கரிடம் பேசிவிட்டதாம். இதில் ஹைலைட்டாக இந்தப் படத்தில் விஜய் நடிக்கிறார். விஜய்யின் கால்ஷிட் தயாராக இருக்க, மற்ற இரண்டு கதாநாயகன்கள் யார் என்ற தேடுதல் நடக்கிறதாம்.
தாணு தயாரிப்பில் சீமான் இயக்கும் பகலவன் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது. படத்தின் ஒன் லைன் சொல்லி விஜய்யின் சம்மதத்தையும் வாங்கிவிட்டார் சீமான். ஜெயம் ராஜா, சித்திக் இயக்கும் படங்களுக்குப் பிறகு பகலவன் படப்பிடிப்பில கலந்து கொள்கிறார் விஜய்.ஏப்ரல், மே மாதங்களில் அரசியல் பணிகள் இருக்கும் என்பதால் இப்போது பகலவன் ஸ்கிரிப்டை முடிக்கும் பணியில் சீமான் ஈடுபட்டிருக்கிறார். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனிடம் சீமான் கூறிய இரண்டு கதைகளில் ஒன்று இந்த பகலவன் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது இயக்கத்தில் உருவான நான் சிவப்பு மனிதன் படத்தை ரீமேக் செய்கிறார். தங்கையின் சாவுக்குப் பிறகு சமூக விரோதிகளை ரகசியமாக கொலை செய்யும் கல்லூரி புரஃபஸராக இதில் ரஜினி நடித்திருந்தார். அவரை துப்பறிந்து கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தவர் பாக்யராஜ்.இந்தப் படத்தை விஜய்யை வைத்து ரீமேக் செய்கிறார் எஸ்.ஏ.சி. படத்தை தயாரிப்பதுடன் அவர் ஒதுங்கிக்கொள்ள, படத்தை இயக்கும் பொறுப்பை வேறொருவருக்கு தர முன்வந்துள்ளார்.காவல்காரன், வேலாயுதம் படங்களுக்குப் பிறகு நான் சிவப்பு மனிதன் ரீமேக்கில் விஜய் நடிப்பார் என்று தெரிகிறது.
தனது முதல் படம் மௌனம் பேசியதே வெளிவந்ததும் அமீர் கதை சொல்ல பிரியப்பட்டது விஜய்யிடம். சில காரணங்களால் அது முடியாமல் போனது. ராம், பருத்திவீரன் என்று அமீர் பிஸியானதால் விஜய், அமீர் சந்திப்பு நடைபெறாமலே போனது.யோகி படத்தின் தோல்வி அமீரை ரிவர்ஸில் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. உடனடி கமர்ஷியல் சக்சஸுக்கான வேட்டையில் இருப்பவர் யோகிக்குப் பிறகு எடுப்பதாக இருந்த கண்ணபிரானை நிறுத்தி வைத்து ஆதிபகவான் என்ற நூறு சதவீத கமர்ஷியல் கதையை ஜெயம் ரவியை வைத்து இயக்குகிறார். இந்தப் படத்துக்குப் பிறகும் அவர் பருத்திவீரன் பாதைக்கு திரும்புவதாக இல்லை.சமீபத்தில் நடந்த விழாவொன்றில் விஜய்யுடன் பணிபுரிய விரும்புவதாக தெரிவித்தார் அமீர். அவரது விருப்பத்துக்கு விஜய் தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. ஆதிபகவான் படத்துக்குப் பிறகு அமீர் விஜய்யை இயக்கினாலும் ஆச்சரியமில்லை.ஆக, அன்று நிகழாமல் போன சரித்திரம் மீண்டும் நிகழ்வதற்கான சாத்தியங்கள் தெரிகிறது.
(காவல்காரன்)பெயர் உறிதிபடுத்த படவில்லை, வேலாயுதம், 3இடியட்ஷ்,பகலவன், நான் சிகப்பு மனிதன், என்ற படங்கள் வரிசைகட்டி நிற்கிறது, இந்த 5 திரைப்படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஜயை பார்க்களாம்.தனது அப்பா பெச்சை கேகாமல் இருந்தால் போதும் படம் நன்றாக ஓடும்.
No comments:
Post a Comment