Thursday, July 1, 2010

vijay next release move

VIJAY NEXT RELEASE MOVE.


மலையாளப் படமான பாடிகார்டை ரீமேக் செய்கிறார் விஜய் . இது விஜய் நடிக்கும் 51வது படமாகும். இந்தப் படத்துக்கு முதலில் காவல்காரன் என்று பெயர் சூட்டினார்கள். இப்போது அது தற்காலிக தலைப்புதான் என்றும் பொருத்தமான ஒரு தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். ராஜ்கிரண், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் வடிவேலுவும் நடிக்கிறார்.பிரபல மலையாள இயக்குநர் சித்திக், இந்த படத்தை இயக்குகிறார். திருவிடைமருதூரில் துவங்கிய படப்பிடிப்புகாரைக்குடி மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
விஜய்க்கு இதில் ஜோடி அசின். இருவரும் இணையும் மூன்றாவது படம் இது.வடிவேலு படம் முழுக்க விஜய்யுடன் வருகிறார். காரணம் அவருக்கு விஜய்யைக் கண்காணிக்கும் வேடமாம்!ராஜ்கிரண் முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கிறார். படத்தில் இவரது மகளான அசினுக்குதான் பாடிகார்டாக வருகிறார் விஜய்.இந்த படம் ஒரு மெகா ஹிட் படமாக அமையும்.

No comments:

Post a Comment