விஜய் நடித்த வெள்ளிவிழாப் படமான காதலுக்கு மரியாதையை தயாரித்த (சங்கிலி முருகனிடமிருந்து வாங்கி) நிறுவனம் ஆஸ்கார் பிலிம்ஸ்.
மீண்டும் இப்போது விஜய்யுடன் கைகோர்த்துள்ளது வேலாயுதம் படத்துக்காக.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியா நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அனன்யா நடிக்கிறார். ஜெயம் ராஜா இயக்குகிறார்.
இந்த படத்தின் தொடக்க விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், வருகிற 15-ந் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது (ஆஸ்கர் ரவிக்கு ராசியான நேரு உள்விளையாட்டரங்கம் இந்த முறை கிடைக்கவில்லை போலிருக்கிறது!).
10 ஆயிரம் ரசிகர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ரசிகர்கள் அனைவருக்கும் விஜய் படம் போட்ட பனியன் தரத் திட்டமிட்டுள்ளனர். ஒரு பனியன் விலை 999 ரூபாய் என்கிரார் ஆஸ்கர் ரவி (ஒரு 9 அதிகமா சேர்த்துக்கிட்டாரோ!).
வருகிற அனைத்து ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் சார்பில் பிரியாணி விருந்தும் உண்டாம்!
No comments:
Post a Comment