எம்.ஜி.ஆர் படத்தலைப்புகளின் மீது ஆர்வம் கொண்ட விஜயும் இந்த தலைப்பையே படத்திற்கு வைக்க விரும்புகிறார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் பழைய 'காவல்காரன்' படத்தை தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம், இந்த தலைப்பை விஜய் படத்திற்கு பயன்படுத்தக்கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் "விஜய் தற்போது நடிக்கும் படத்திற்கு 'காவல்காரன்' எந்ற தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வருகிறது. இந்த தலைப்பு உரிமையை யாருக்கும் நாங்கள் தரவில்லை. எனவே, இந்த தலைப்பை விஜய் படத்திற்கு வைக்க அனுமதிக்க கூடாது" என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து விஜய் படத்திற்கு அந்த தலைப்பை வைக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இந்த கடிதத்தின் மூலம் நடவடிக்கை எடுத்த தயாரிப்பாளர் சங்கம், 'காவல்காரன்' பட தலைப்பு வைக்க நாங்கள் அனுமதி தரவில்லை என்று சத்யா மூவிஸ் சார்பில் சங்கத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் வேறு தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள் என்று விஜய் படத்தின் தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்கள்.
இதன் மூலம் 'காவல்காரன்' என்ற தலைப்பை மாற்றி 'காவல் காதல்' என்ற தலைப்பை விஜய் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தலைப்பையும் படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
No comments:
Post a Comment